யப்பா சூர்யாவின் கங்குவா படம் இத்தனை ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறதா?- யாருமே எதிர்ப்பார்க்கலையே
கங்குவா படம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் கங்குவா.
3டி தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இப்படம் இந்திய மொழிகள் தவிர உலகம் முழுவதும் மொத்தம் 38 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பாலிவுட் பிரபலங்கள் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இரண்டு பழங்குடி மக்களுக்கு இடையே நிகழும் மோதலை அடிப்படையாக கொண்டு படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
முக்கிய தகவல்
வரும் நவம்பர் 14ம் தேதி மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் கங்குவா படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படம் எங்கு எங்கு எவ்வளவு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதோ அந்த விவரம்,
- தமிழ்நாடு- 700+
- ஆந்திரா, தெலுங்கானா- 900 முதல் 1000
- கேரளா, கர்நாடகா- 800 முதல் 1000
- வட இந்தியா- 3000 முதல் 3500 ஸ்கிரீன்கள்
- ஓவர்சீஸ்- 4000+
மொத்தமாக சூர்யாவின் கங்குவா படம் 10 ஆயிரம் ஸ்கிரீன்களுக்கு மேல் திரையிடப்பட இருக்கிறதாம்.
தென்னிந்திய சினிமாவில் அதிக ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகும் படமாக அமைந்துள்ளது.