OTTயில் பெரிய தொகைக்கு விலைபோன சூர்யாவின் கங்குவா- அதுவும் இத்தனை கோடியா?
சூர்யாவின் கங்குவா
சூரரைப் போற்று, ஜெய் பீம் என தொடர் வெற்றிப் படங்களுக்கு பிறகு சூர்யா நடித்துவரும் திரைப்படம் தான் கங்குவா.
சிறுத்தை, வீரம், விஸ்வாசம் என மாஸ் வெற்றிப்படங்களை கொடுத்த சிவா இயக்கத்தில் தான் சூர்யா நடித்து வருகிறார்.
பேண்டஸி கதைக்களம் கொண்ட இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 50% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை 10 மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனராம்.

OTT வியாபாரம்
படப்பிடிப்பு ஒருபக்கம் நடக்க வியாபாரமும் சூடு பிடிக்க நடந்து வருகிறது. கங்குவா படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெருந் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.
அதன்படி கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் ரூ.80 கோடி கொடுத்து வாங்கி உள்ளது என்கின்றனர்.

மீண்டும் சின்னத்திரையில் வலம் வரப்போகும் பெப்சி உமா- எந்த நிகழ்ச்சி, அவரே சொன்ன குட் நியூஸ்