நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள். அவர்கள் இருக்கும் ஒன்றாக இருக்கும் குழந்தை பருவ போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
25 வருடங்கள் கடந்த சூர்யா
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி 25 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. அவரது ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமின்றி சூர்யாவும் நெகிழ்ச்சியாக ட்விட்டரில் பேசி இருந்தார்.
"Truly a beautiful and blessed 25years..! Dream and believe..! Your suriya" என அவர் தனது பதிவில் கூறி இருக்கிறார்.
குழந்தை போட்டோ பதிவிட்டு வாழ்த்திய கார்த்தி
சூர்யாவின் தம்பி கார்த்தி தான் அவர்கள் சின்ன குழந்தையாக இருந்தபோது எடுத்த போட்டோவை பதிவிட்டு ட்விட்டரில் வாழ்த்தி இருக்கிறார்.
"இரவு பகலாக உழைத்து தான் சூர்யா அவரது அனைத்து மைனஸ்களையும் பெரிய ப்ளஸ் ஆக மாற்றினார். அவரது சாதனைகளை அவரே முறியடிக்க வேண்டும் என உழைப்பவர். ஒரு மனிதனாக அவரது இதயம் மிகப்பெரியது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் வாழ்க்கையை மாற்றி கொண்டிருக்கிறார்" என கார்த்தி குறிப்பிட்டு இருக்கிறார்.
.He worked day & night to make his every minus into his greatest plus. He focused only at outperforming his own achievements. As a person, he made his already generous heart even larger and shaped the lives of thousands of deserving kids. That’s my brother!#25YearsOfCultSuriyaism pic.twitter.com/5GELKdxGS0
— Actor Karthi (@Karthi_Offl) September 6, 2022
நடிகை நமீதாவா இது, குழந்தைகள் பெற்ற பிறகு இப்படி ஆகிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்