ஸ்லாட் அண்ட் பேப்பர் லுக்கில் மாறிய சூர்யா.. மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்
சூர்யா லேட்டஸ்ட் லுக்
நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். ஏங்கு சென்றாலும் இவரின் திரைப்படங்கள் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது.
அதன்படி விக்ரம் திரைப்படத்தில் அவரின் ரொலக்ஸ் கதாபாத்திரம் செம வைரலானது, இதனால் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தின் மீது இப்போதே ரசிகர்கள் ஆர்வம் அதிகமாகியுள்ளது என்றே கூறலாம்.
மேலும் அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அப்டேட்ஸும் வந்தபடி உள்ளன, அந்த வகையில் சூர்யா 41 திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக்காகி வரும் சூரரை போற்று திரைப்படத்திலும் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் பாலா இயக்கத்தில் நடிந்து வரும் சூர்யா பயங்கர முரட்டு தனமான லுக்கில் நடித்து வந்தார். இதனிடையே தற்போது சூர்யா அவரின் புதிய லுக்கில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஜோதிகாவுடன் வெளியே சென்றுள்ள சூர்யா அங்கு ரசிகர் ஒருவருடன் செல்பி எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சூர்யாவின் புதிய லுக்கில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்களா இது?- சூப்பர் நிகழ்ச்சிக்கு வந்துள்ள பிரபலங்கள்
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri