மீண்டும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சூர்யாவின் பிரம்மாண்ட திரைப்படம்
சூர்யாவின் ஓடிடி ரிலீஸ்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா, மணிகண்டன், லிஜோமல் ஜோஷ் இணைந்து நடித்த ஜெய் பீம் திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது.
இப்படத்தை டி. ஜெ. ஞானவேல் இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களும் திரையரங்கில் வெளிவராமல் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது ரசிகர்களுக்கு வருத்தமளித்தது.
இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் ஒடிடியில் சூர்யா படம்
அதன்படி, பாலா இயக்கத்தில் பல வருடங்கள் கழித்து சூர்யா நடித்து வரும் திரைப்படம் தான், நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால் இதுவரை நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த அணைத்து திரைப்படங்களையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரித்திருந்தது.
தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தையும் 2டி நிறுவனம் தான் தயாருக்கிறது. இதனால், இப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளிவர அதிக வாய்ப்புகள் என்று தெரிவிக்கின்றனர்.
எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்.. எல்லோரையும் அழவிட்ட பிக் பாஸ்!