யாரும் எதிர்பார்க்காத வகையில் இயக்குநர் சிவா செய்யவுள்ள விஷயம் ! சூர்யாவுடன் பிரம்மாண்ட கூட்டணி..
சூர்யாவின் மெகா பட்ஜெட் திரைப்படம்
தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிறுத்தை சிவா.
சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என இவரின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்ந்துள்ளன.
அஜித்துடனான வெற்றி கூட்டணியை தொடர்ந்து இயக்குநர் சிவா அடுத்து ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் பணியாற்றியிருந்தார். கடந்த வருடம் தீபாவளியில் வெளியான அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அடுத்தபடியாக இயக்குநர் சிவாவின் பிரம்மாண்ட திரைப்படம் குறித்து தகவல் நேற்றிலிருந்து பரவி வருகின்றன. அதன்படி சூர்யாவின் திரைப்படத்தை இயக்குநர் சிவா இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதனிடையே அப்படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் பரவி வருகிறது.
ஆம், சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், மிக பெரிய பொருட்செலவில் உருவாகும் அப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவேடுத்து இருப்பதாகவும் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

வெளியானது வாரிசு படத்தின் Second லுக்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu