சூர்யாவின் லைன் அப்-ல் இணைந்த சூப்பர் ஸ்டார் பட இயக்குனர் !
விரைவில் வெளியாகும் ET
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார்.
மேலும் ET படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தை தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.

மாஸ் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா
இதனிடையே ET பட ப்ரோமோஷனுக்காக சூர்யா இன்று கேரளாவிற்கு சென்றுள்ளார், அங்கு ரசிகர்களை சந்தித்து Press Meet-ல் கலந்து கொண்ட சூர்யா சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதன்படி சூர்யா பேசியபோது இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், அப்படம் வருங்கால்களில் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பேசியுள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் அமல் நீரத் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான "Bheeshma Parvam" திரைப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது. மேலும் இயக்குனர் அமல் நீரத் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அதிரடி ஆக்ஷன் படங்களாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் நடிப்பில் வெளியான 'நீ வருவாய் என' படத்தில், முதலில் நடிக்கவிருந்தது விஜய்யா !