அஜித் நடிப்பில் வெளியான 'நீ வருவாய் என' படத்தில், முதலில் நடிக்கவிருந்தது விஜய்யா !
சூப்பர் ஹிட்டான 'நீ வருவாய் என'
நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நீ வருவாய் என, இப்படத்தில் அவருடன் பார்த்திபன் மற்றும் தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் கதையை இயக்குனர் ராஜகுமாரன் முதலில் தளபதி விஜயிடம் தான் சொல்லியிருந்தாராம்.

ராஜகுமாரன் விஜயிடம் சொன்ன கதை
இயக்குனர் ராஜகுமாரன் அளித்திருந்த பேட்டியில் அவர் இது குறித்து சொன்ன போது, " நீ வருவாய் என, பட கதையை விறு விதமாக முதலில் விஜயிடம் தான் சொல்லியிருதேன்.
ஆனால் அப்படத்தின் கதையை வித்தியாசமாக சொல்லியிருந்தேன், அதனால் அந்த கதையை அவருக்கு பிடிக்காமல் போய்விட்டது. பின் நீ வருவாய் என படம் வெளியானதும், விஜய் என்னிடம் கதை சொல்லும் போது விறுவிதமாக சொல்லிவிட்டு படத்தை விறுவிதமாக எடுத்துள்ளீர்களே என கேட்டார்" எவ்வாறு ராஜகுமாரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் ராஜகுமாரன் விஜயுடன் பூவே உனக்காக திரைப்படத்தில் அவருடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் நீ வருவாய் என திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

விவாகரத்தை தொடர்ந்து முக்கிய இடத்தில் சூர்யாவின் படத்தை தொடங்கும் பாலா !
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri