ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் மாதவன் ! நேரில் கண்ட சூர்யா கொடுத்த ரியாக்ஷன்
சூர்யா கொடுத்த ரியாக்ஷன்
நடிகர் மாதவன் அவரே நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ராகெட்ரி, இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளரான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக இந்த ராகெட்ரி உருவாகியுள்ளது.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படம் வரும் ஜுலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் மாதவன் பல இடங்களுக்கு சென்று இப்படம் குறித்து பேசிவருவதை பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் இப்படம் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வரும் மாதவன் இப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சூர்யா மாதவனை பார்த்து கொடுத்த ரியாக்ஷன் வீடியோவை தான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆம், நம்பி நாராயணனின் கதாபாத்திரத்திற்காக அவரை போலவே மாதவன் மாறியுள்ளதை சூர்யா பார்த்து வாயடைத்து நின்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை நீங்களே பாருங்கள்.
2001ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ