20 வயதில் நடிகர் சூர்யா நிராகரித்த கதை ! பின் அஜித் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம்
சூர்யா
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர்.
இவர் அடுத்தடுத்து பல முக்கிய இயக்குநர்களுடன் பணியாற்ற இருக்கிறார். பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
மேலும் சமீபத்தில் கூட நடிகர் சூர்யாவிற்கு சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவரின் இத்தனை வருட திரைபயணத்தில் தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
சூர்யா நிராகரித்த கதை
அப்படியான சிறந்த நடிகராக திகழும் நடிகர் சூர்யா அரம்பத்தில் நடிப்பில் விருப்பம் இல்லாமல் தான் இருந்துள்ளார். பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் சூர்யாவிற்கு நடிப்பில் ஆர்வம் இல்லையாம்.
அந்த வகையில் சூர்யாவின் 20 வயதில் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் ஆசை திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அதனை நிராகரித்துள்ளார் சூர்யா. பின் அந்த கதையில் அஜித் நடித்து பெரிய ஹிட்டானது.
மேலும் இரண்டு வருடங்களுக்கு பின் தனது முடிவை மாற்றிக்கொண்ட சூர்யா மீண்டும் அதே இயக்குநர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்தி சுரேஷ் மேக் அப் இல்லாமல் பதிவிட்ட புகைப்படம்