சூர்யாவின் ரெட்ரோ படத்தின் அர்த்தம் இதுதான்.. இயக்குநர் உடைத்த விஷயம்
ரெட்ரோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.
இதுதான்
இந்நிலையில், ரெட்ரோ படம் குறித்து கார்த்தி சுப்புராஜ் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, ரெட்ரோ என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதாவது, "ரெட்ரோ என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல். இதற்கு திரும்பிப் பார்ப்பது என்ற வேறு அர்த்தமும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.