பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் உலகம் முழுவதும் சூர்யாவின் சீன் எவ்வளவு வசூல் தெரியுமா?
சீன் படம்
Scene Movie Worldwide Box Office: ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லீன் நடிப்பில் தீபாவளி சரவெடியாக வெளிவந்த படம் சீன்.
இப்படம் வெளிவந்த முதல் நாளிலிருந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது, இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் வெளியிட்ட அனைத்து இடங்களிலுமே மிகப்பெரிய வசூல் சாதனை தான்.
இதில் முக்கியமாக தெலுங்கு பகுதி, கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களில் மிகப்பெரிய வசூல் தினமும் வந்துகொண்டு இருக்கிறது.

கலெக்ஷன்
இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல் படி இப்படம் 6 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ 185+ கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

கண்டிப்பாக இன்னும் இரண்டு தினங்களில் அல்லது நாளைக்கே கூட இப்படம் ரூ 200 கோடி க்ளப்பில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை நமக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது, அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri