முதல்வரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சூர்யா.. மகிழ்ச்சியான ட்விட்
சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் குழுவில் ஒருவராக நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு பலரும் இன்று காலையில் இருந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அதில் நடிகர் சூர்யாவை வாழ்த்தி, தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதில் " தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, The Academy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா, அவர்களுக்கு எனது பாராட்டுகள்! " என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு தற்போது நடிகர் சூர்யா மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் " தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் " என்று கூறியுள்ளார்.
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2022
வானமே எல்லை!
தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் ?? @mkstalin https://t.co/hkqUGRTCmV
— Suriya Sivakumar (@Suriya_offl) June 29, 2022

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
