தனது மகள் மற்றும் மனைவியுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா- வெளிவந்த புகைப்படங்கள்
நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி பல விருதுகள் சிறந்த நடிகருக்காக வாங்கியிருந்தாலும் சூரரைப் போற்று படத்தின் மூலம் தேசிய விருது வரை வாங்கியுள்ளனர்.
அவர் வாங்கிய விருதை அவரது ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். இப்போது அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வாடிவாசல் படம் தான். இப்படத்திற்காக சூர்யா சொந்தமாக மாடுகள் வாங்கி அதனிடம் சில பயிற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
வெற்றிமாறன்-சூர்யா இணைந்துள்ள இப்படத்தை தாணு அவர்கள் தான் தயாரித்துள்ளார்.
கீழடியில் நடிகர்
மும்பை, தமிழகம் என பயணித்துக் கொண்டிருக்கும் சூர்யா தனது மனைவி ஜோதிகா மற்றும் மகள் தியாவுடன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியத்திற்கு வந்துள்ளார்.
அங்கு தமிழர்களின் பழங்கால பண்பாட்டை வெளிக்கொணரும் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக கிமு ஆறாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்துக்குரிய பல தொன்மையான பொருள்கள் கிடைத்துள்ளது என்றும் இது சிந்து சமவெளி நாகரிகத்திற்கு தொடர்புள்ளது என்றும் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
திடீரென வருகை தந்த சூர்யா குடும்பத்திற்கு கீழடி அருங்காட்சியகம் அதிகாரிகள் அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தை சுற்றிக் காட்டியுள்ளனர்.
2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள்