சூர்யா 42 படத்தின் டைட்டில் இதுதானா! அஜித்செண்டிமெண்ட்டை பின்பற்றும் சிறுத்தை சிவா
சூர்யா 42
சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி சேர்ந்து இருக்கும் படம் தான் 'சூர்யா42'. வரலாற்று கதை என்பதால் மிக பிரம்மாண்டமாக 3டியில் படமாக்கி வருகிறார்கள். ஹிந்தி நடிகை திஷா பாட்னி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி பான் இந்தியா படமாக இதை 10 மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.

டைட்டில் இதுதான்?
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல்களின்படி சூர்யா42 படத்திற்கு வீர் என தலைப்பிட்டு இருக்கிறார்கள் என தகவல் பரவி வருகிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும் தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சிறுத்தை சிவா அவரது முந்தைய அஜித் பட சென்டிமென்டை பின்பற்றி இதற்கும் V-யில் தொடங்கும் டைட்டில் வைத்து இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை! இதனால் தான் விலகினாராம்