திரையரங்க உரிமையாளர் ஆகும் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் சூர்யா!
சூர்யா
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருபவர்.
சமீபத்தில் 68-வது தேசிய விருதிற்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் சூர்யா சூரரை போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்தை தொடர்ந்து எந்த திரைப்படத்தில் சூர்யா என்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதும் வெளியாகவில்லை.

திரையரங்கு
இந்நிலையில் நடிகர் சூர்யா 5 திரையரங்குகளை லீஸ் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, இதனை மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தெலுங்கில் இதேபோல் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் திரையரங்குகளை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கைவிடப்பட்ட தனுஷின் முக்கிய திரைப்படங்கள்