தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிலும் நடிகர் சூர்யா செய்த செயல்- வைரலாகும் வீடியோ, வாழ்த்தும் மக்கள்
வாடிவாசல் திரைப்படம்
நடிகர் சூர்யா அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்து வெற்றி நாயகனாக இருக்கிறார்.
சூரரைப் போற்று, ஜெய் பீம் அடுத்து எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்த வந்த சூர்யா தனது தயாரிப்பு நிறுவனம் மூலமும் ஒரு வெற்றிப்படத்தை கண்டுள்ளார்.
அதாவது அவர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
கேரளாவில் சூர்யா புகழ்
இப்படி நடிப்பது, படங்கள் தயாரிப்பது என பிஸியாக இருந்தாலும் ஒரு விஷயத்தை சூர்யா தொடர்ந்து செய்து வருகிறார். அதாவது அகரம் என்றதன் மூலம் தமிழகம் முழுவதும் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவிகள் செய்கிறார்.
இப்போது பார்த்தால் தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிலும் சூர்யாவின் உதவி சேருகிறது. ஒரு பெண்ணிற்கு படிப்பிற்காக சூர்யா மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார்.
இதோ அந்த வீடியோ,
#Suriya Helped a Girl in Kerala By Giving Her a New Phone For PSC Exam??
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 22, 2022
Not Only in TamilNadu He Extended Helps To Students in Kerala Too♥️pic.twitter.com/dKVx1AUz50
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் நியூ லுக்- முடி கட் செய்து ஆளே மாறிவிட்டாரே?