சூர்யாவின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் ! எதிர்பார்க்காத கூட்டணி..

By Jeeva Jul 01, 2022 09:20 AM GMT
Report

சூர்யா - சுதா கொங்கரா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா, கடந்த சில நாட்களாகவே சூர்யா குறித்த செய்தி தான் இணையத்தில் பெரியளவில் பரவி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா ஆஸ்கார் விருதின் தேர்வுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக அறிவித்து இருந்தனர், அதற்கு திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி பல முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

மேலும் சூர்யா கதாபாத்த்திரங்களில் நடித்திருந்த விக்ரம் மற்றும் ராகெட்ரி உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. அதில் குறிப்பாக சூர்யாவின் கதாபாத்திரம் அனைவரும் கவர்ந்தது என்றே கூறலாம்.

இந்நிலையில் சூர்யா அடுத்த பல முக்கிய இயக்குநர்களுடன் பணிபுரியவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயம், அந்த வகையில் சூரரை போற்று திரைப்படத்தை மீண்டும் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

அப்படத்தை கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கிடையே தற்போது அப்படம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி சூர்யாவுடன் அப்படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

மேலும் இந்த தகவல் வதந்தி என்றும் கூறப்படுகிறது, சூர்யா தனது படங்களை முடித்த பின்பே அப்படம் குறித்த தகவல் வரும் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.  

சூர்யாவின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படத்தில் முன்னணி மலையாள நடிகர் ! எதிர்பார்க்காத கூட்டணி.. | Surya Sudha Movie Added Malayalam Actor

மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து தளபதி 67 படத்திலும் இவரா! வெளியான புதிய அப்டேட்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US