விக்ரம் பட ஷூட்டிங்கில் நடிகர் சூர்யா எடுத்துக்கொண்ட போட்டோ! யாருடன் உள்ளார் பாருங்க..
எதிர்பார்ப்பை எகிற வைத்த விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்துள்ளது.
விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோருடன் நடிகர் கமலும் நடித்துள்ள விக்ரம் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.
மேலும் நேற்று வெளியான ட்ரைலரை கண்டு அனைவரும் வியந்துள்ளனர், திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தை அதிகமாகியுள்ளது விக்ரம்.

சூர்யா கேமியோ
இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது, ஆனால் அந்த தகவல் சமூக வலைத்தளங்களில் முன்பே வெளியாகிவிட்டன.
இதனால் நேற்று லோகேஷ் கனகராஜ் விழாவில் அனைவரும் முன் சூர்யா விக்ரம் இப்படத்தை உறுதி செய்து அவருக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.
மேலும் தற்போது சூர்யா விக்ரம் பட ஷூட்டிங்கின் போது உதவி இயக்குனர் ஒருவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

தசாவதாரம் 2ம் பாகம் வருமா? கேஎஸ் ரவிக்குமார் சொன்ன அதிர்ச்சி பதில்