சூர்யவம்சம் பட புகழ் குட்டி சக்திவேலை நியாபகம் இருக்கா?- திருமணம், குழந்தை என இப்போது எப்படி உள்ளார் பாருங்க
சூர்யவம்சம்
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி, ஆனந்த் ராஜ், ப்ரியா ராமன், ஜெய் கணேஷ் என பலர் நடிக்க கடந்த 1997ம் ஆண்டு வெளியான படம் சூர்யவம்சம்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் வெளிவந்த இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட் தான். இந்த படம் வெளியானி கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
சக்திவேல் மற்றும் அவரது மகன் சின்ராசு சுற்றியே கதை நகரும். இப்போது இந்த படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினாலும் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

குட்டி சக்திவேல்
இந்த படத்தில் சின்ராசு மகனாக ஜுனியர் சக்திவேலாக நடித்தவர் ஹேமலதா.
இன்றளவும் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் சிறுவன் என்றே பலரும் நினைப்பதுண்டு. இப்படத்தை தாண்டி உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் ஹேமலதா நடித்திருக்கிறார்.
மேலும் இவர் சித்தி, கனா காணும் காலங்கள், தென்றல் போன்ற பல தொடர்களில் ஹேமலதா நடித்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு மகளும் இருக்கிறார்.
