ஸ்வீட்ஹார்ட் படத்தால் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பல கோடி நஷ்டம்.. ஷாக்கிங் தகவல்
ஸ்வீட்ஹார்ட்
வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவர் ரியோ ராஜ். ஜோ திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இவர் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்த திரைப்படம்தான் ஸ்வீட்ஹார்ட்.
காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியிருந்தார். மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். ரசிகர்களிடையே எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
பல கோடி நஷ்டம்
இந்த நிலையில், ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 5 ஸ்டார் செந்தில் ரூ. 5 கோடி கொடுத்து வாங்கியிருந்தார். இதுவரை இப்படம் தமிழகத்தில் ரூ. 1 கோடி கூட வசூல் செய்யவில்லை என்பதே விநியோகஸ்தர்களின் கருத்தாக உள்ளது.
இதனால் இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு ரூ. 4 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்த வசூலால் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.