ஸ்வீட்ஹார்ட் படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஸ்வீட்ஹார்ட்
தொலைக்காட்சியின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்து, பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த ஹீரோக்களில் ஒருவர் ரியோ ராஜ்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவருக்கு, கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த ஜோ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம்தான் ஸ்வீட்ஹார்ட். காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியிருந்தார்.
வசூல்
மேலும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் ரூ. 75 லட்சம் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.