திடீரென மயங்கி விழுந்த நடிகர் டி. ராஜேந்தர்.. பதறிய ரசிகர்கள்!!
டி ராஜேந்தர்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் டி ராஜேந்தர்.
இவர் கடந்த ஆண்டு உடல் நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் நலமடைந்தார். அதன் பின்னர் பெரிதா எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.
பதறிய ரசிகர்கள்
தற்போது நடிகர் விஜய் இன்று நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வரும் அதே சமயத்தில், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பிரபல நடிகர் டி. ராஜேந்தர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அப்போது டி. ராஜேந்தர் திடீரென மயக்கம் ஏற்பட்டு தடுமாறினார். உடனே சுற்றி இருந்தவர்கள் அவரை அமர வைத்து தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினர். அவரது வயதை மனதில் வைத்து கொண்டு வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
