சமந்தாவை மிஞ்சும் நடிகை தமன்னாவின் இன்றைய சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
தமன்னா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தமிழில் கடைசியாக விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் எனும் படத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் இதுவரை நடிக்காமல் இருக்கும் தமன்னா ஹிந்தியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். படங்கள், வெப் சீரிஸ் என தொடர்ந்து ஹிந்தியில் பல கமிட்மெண்ட்ஸ் வைத்துள்ளார்.

அதே போல் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
இன்றைய சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகை தமன்னாவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை தமன்னாவின் இன்றைய முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 110 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.

சமந்தாவின் இன்றைய சொத்து மதிப்பை விட தமன்னாவின் சொத்து மதிப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி அர்ச்சனா.. அவரா இது, நீங்களே பாருங்க