அங்கு கூப்பிட்டாலும் போய்விடுவேன்.. தனுஷை பார்க்கும் போது அதுதான் நடக்கும்!. தமன்னா வெளிப்படை

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
ஜெயிலர்
சமீபகாலமாக இந்திய அளவில் பிரபலமாகி வருபவர் தான் தமன்னா. தற்போது ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது.
தமன்னா வெளிப்படை
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமன்னாவிடம் தொகுப்பாளர், "நீங்கள் விஜய், அஜித், தனுஷ், சூர்யாவிடம் கேட்க விரும்பும் கேள்வி என்ன என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த தமன்னா, விஜய்யிடம் தளபதி 68 படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்க என்று கேட்பேன். அவருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்.
அஜித் அருமையாக சமைப்பார், படத்தின் ஷூட்டிங்கின் போது எனக்கு இட்லி கொடுத்தார். அந்த மிருதுவான இட்லியை இதுவரை எங்கேயும் சாப்பிட்டது கிடையாது. அடுத்து எப்போ எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்? அஜித்திடம் கேப்பேன். அவர் பைக் ரைட் கூப்பிட்டாலும் போய்விடுவேன்.
நான் தனுஷிடம் எப்போது மும்பை வந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க என்று சொல்லுவேன். ஆனால் அவர் பண்ணமாட்டார். அதை தான் அவரிடம் கேப்பேன்.
சூர்யாவிடம் கங்குவா படத்தின் கதை அம்சம் குறித்து கேள்வி கேட்பேன் என்று தமன்னா கூறியுள்ளார்.
இலங்கை பீச்சில் நஸ்ரியா நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம்..இதுவரை இல்லாத கிளாமர்!