பாகுபலி பற்றி தான் அப்படி கோபமாக பேசினாரா தமன்னா?
நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தமன்னா
தமன்னா தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சினிமா துறையில் பெண்களுக்கு மதிப்பு இல்லை என கூறி இருக்கிறார்.
"யாரும் பெண்களை சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. நான் பணியாற்றும் படங்களில் நான் எதாவது கருத்து கூறினால், அது சரியா என என்னையே இன்னொரு முறை யோசிக்க வைப்பார்கள். சில நேரங்களில் நான் கோபமாக என் ஒபினியனை சொன்னால் தான் எடுத்துக்கொள்வார்கள்."
"ஒரு காலத்தில் நான் ஹீரோவின் love interest ரோல்களில் நடித்து எனக்கே போர் அடித்துவிட்டது. தற்போது எனக்கு பல விதமான கேரக்டர்கள் வருகிறது, இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை" என கூறி இருக்கிறார்.

போஸ்டரில் கூட போட மாட்டாங்க
மேலும் ஹீரோவுக்கு அதிகம் சம்பளம் தருகிறார்கள், ஆனால் ஹீரோயின்களுக்கு சம்பளம் மிக மிக குறைவு எனவும் தெரிவித்து இருக்கிறார்.
"நான் இரண்டு pan India படங்களில் நடித்து இருக்கிறேன். அவர்களிடம் சம்பளத்தை கூட எளிதில் வாங்கிவிடலாம், ஆனால் என் புகைப்படம் போஸ்டரில் வருவது மிக மிக கடினம். ஆண் நடிகர்கள் ப்ரோமோஷனில் கலந்துகொள்ளவில்லை என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை, ஆனால் நான் இரண்டு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால்.. எனக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை என செய்தி வரும்" என தமன்னா கோபமாக கூறி இருக்கிறார்.

கணவர் இறப்பிற்கு பிறகு மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம்- யாரை சந்தித்து எடுத்துள்ளார் பாருங்க
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu