நடிகை தபுவை காதலிக்கிறேன்.. விஜய் வர்மாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல ஹீரோயினாக மாறியவர் தான் தமன்னா.
இவர் தமிழில் 2006 -ம் ஆண்டு வெளியான "கேடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.
தற்போது தமன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

தபுவை காதலிக்கிறேன்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமன்னா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், " என்னையும் விஜய் வர்மா குறித்து பல வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் படத்தில் ஒன்றாக நடித்தோம் அவ்ளோதான்".
"எனக்கு கரீனா கபூர், தபு இவர்களை ரொம்ப பிடிக்கும். தற்போது வரை தபு இளமையாக தான் இருக்கிறார். நான் தபுவை காதலிக்கிறேன்" என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா.

மாவீரன் பட்ஜெட் இவ்வளவு தான்.. ஆனால் ரிலீசுக்கு முன்பே இத்தனை மடங்கு லாபமா?
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu