யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ?.. தனது வாழ்க்கைத் துணை குறித்து தமன்னா ஓபன் டாக்!
தமன்னா
இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.
தற்போது தமன்னா டு யூ வாண்ட் அ பார்ட்னர்' (Do You Want A Partner) என்ற வெப் சீரிஸின் ப்ரோமோசனில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓபன் டாக்!
அதில், " நான் சிறந்த வாழ்க்கைத் துணையாக மாற முயற்சிக்கிறேன். முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நான் அவர்களின் வாழ்க்கைக்கு வந்ததாக ஒருவர் நினைக்க வேண்டும்.
அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி எனக்கு வாழ்க்கைத் துணையாக வரவேண்டும். அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று நான் பார்க்க வேண்டும். யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.