விஜய் அப்பா ராசியானவர், அதனால்தான் விஜய் ஆண்டனி இப்போது.. ஷோபா சொன்ன ரகசியம்!
விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி இயக்குநர், பாடகர் என கலக்கிய பிரபலம் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகி பல ஹிட் படங்கள் கொடுத்த இவர் தன் தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பின் நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுக்க ரசிகர்கள் கவனிக்கும் நடிகராக வலம் வருகிறார்.
தற்போது, விஜய் ஆண்டனி அவரது 25-வது படமான சக்தித் திருமகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப். 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ரகசியம்!
இந்நிலையில், விஜய் ஆண்டனி குறித்து விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " அவரை முதலில் என் கணவர் தான் சுக்ரன் படத்தில் நடிக்க வைத்தார். அப்போது அவர் வேறு ஒரு பெயர் வைத்திருந்தார். என் கணவர் தான் அந்த பெயரை மாற்றி அவருக்கு விஜய் ஆண்டனி என்று வைத்தார்.
என் கணவர் மிகவும் ராசியானவர் அதனால் தான் விஜய் ஆண்டனி இப்போது நன்றாக இருக்கிறார். 25 படத்தில் நடித்து விட்டார். விஜய் ஆண்டனி தேர்வு செய்யும் கதை வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கும். அவர் ஒரு வித்தியாசமான மனிதர்" என்று தெரிவித்துள்ளார்.