சில்க் ஸ்மிதா முதல் VJ சித்ரா வரை.. தற்கொலை செய்துகொண்ட தமிழ் நடிகர்கள்
சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் தற்கொலை என்பது பல ஆண்டுகளாக நடந்துகொண்டே இருக்கும் தொடர்கதையாகி விட்டது. இப்படி விபரீத முடிவெடுத்த தமிழ் சினிமா நடிகர்கள் பற்றிய விவரங்கள் இதோ.
VJ சித்ரா
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியல்களில் நடிகையானவர் விஜே சித்ரா. அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்கிற ரோலில் நடித்து வந்த நிலையில் ஷூட்டிங் முடித்துவிட்டு ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். டிசம்பர் 10, 2020ல் அவரது தற்கொலை ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது தற்போது வரை மர்மமாகவே இருந்து வருகிறது. அவரது கணவர் ஹேம்நாத் குற்றவாளி என சிறையில் அடைக்கப்பட்டு அதற்கு பிறகு ஜாமீனில் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சில்க் ஸ்மிதா
கிளாமர் குயினாக தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பிரபலமானவர் சில்க் ஸ்மிதா. வினு சக்ரவர்த்தியின் வண்டிச்சக்கரம் படம் மூலமாக அறிமுகம் ஆன அவர் அதில் நடித்த சில்க் கதாபாத்திரத்தால் சில்க் ஸ்மிதா என பெயர் பெற்றார்.
அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு 26 ஆண்டுகள் ஆகிறது. தற்போது வரை அவர் பெயர் பேசப்படும் ஒன்றாக தான் இருந்து வருகிறது. அவரது தற்கொலைக்கு காரணம் பற்றி பல தகவல்கள் கூறப்படுவதுண்டு. ஒரு சினிமா பிரபலத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அதன் பின் ஏமாற்றப் பட்டார், அவர் மீது ஆசைப்பட்ட பலர் கொடுத்த பிரச்சனைகள் என பல விஷயங்கள் அவரது மன அழுத்தத்திற்கு காரணமாக அமைந்து, அதன் பின் தற்கொலைக்கும் காரணமாகிவிட்டது.
சாய் பிரஷாந்த்
சீரியல் நடிகரான சாய் பிரஷாந்த் 2016ல் மார்ச் 13ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் சில சொந்த பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த நிலையில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொள்ளும்போது அவருக்கு வயது வெறும் 30 மட்டுமே.
ஷோபனா
வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலருடன் காமெடி ரோல்களில் நடித்து இருக்கும் நடிகை ஷோபனா 2011ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 32.
சில்லுனு ஒரு காதல் படத்தில் வடிவேலு ஜோடியாக நடித்தவர் அவர், அதன் பின் வடிவேலுவுடன் நகரம் மறுபக்கம் படத்தில் படத்திலும் நடித்து இருந்தார். சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்து இருக்கிறார். லொள்ளு சபா நிகழ்ச்சியிலும் அவர் நடித்து இருக்கிறார்.
குணால்
காதலர் தினம் படத்தின் மூலமாக பிரபலம் ஆனவர் குணால். அவர் பார்வை ஒன்றே போதுமே, நண்பனின் காதலி , புன்னகை தேசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
அவர் மும்பையில் காதலியுடன் தங்கி இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த முடிவுக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் தான் காரணம் என கூறப்படுகிறது.
மோனல்
சிம்ரனின் தங்கையான மோனல் 2001ல் வந்த பார்வை ஒன்றே போதுமே படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். தற்கொலை செய்து கொண்ட குணால் உடன் அவர் சில படங்கள் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனல் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது இந்த முடிவுக்கு ஒரு பிரபல டான்ஸ் மாஸ்டர் தான் காரணம் என அப்போதே சிம்ரன் புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் முடிந்த சில வாரங்களில் நிக்கி கல்ராணி எடுத்த புதிய முடிவு?