ரசிகர்களை கவர்ந்த தமிழ் நடிகர்களின் தாடி ஸ்டைல்
தமிழ் சினிமாவின் நடிகர்கள் பல்வேறு வகையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்கள். நடனம், சண்டை, ஸ்டைல், மாஸ் சீன்ஸ் என பல விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் தங்களது தாடி ஸ்டைல் மூலமாகவும் பல ரசிகர்களை, நடிகர்கள் கவர்ந்துள்ளார்கள். அப்படி, எந்தெந்த நடிகர்களின் தாடி ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது என்பதை பார்க்கவிற்கும் கட்டுரை தான் இது..
கமல் ஹாசன்
உலகநாயகன் கமல் ஹாசன் விருமாண்டி படத்திற்காக மிகவும் வித்தியாசமான, செம மாசான ஸ்டாலில் தனது தாடியை வைத்திருந்தார். விருமாண்டி படத்தில் ஹைலைட்டான விஷயங்களில் கமலின் தாடி ஸ்டைலும் ஒன்று. விருமாண்டி படம் வெளிவந்த நேரத்தில், கமல் வைத்திருந்த அந்த தாடி ஸ்டைலை பார்த்து அப்படியே ரசிகர்கள் பலரும் வைத்துக்கொண்டார்கள்.
ரஜினிகாந்த்
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த கபாலி படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் வெறித்தனமான மாஸ் லுக்கில் தாடி மீசை என வைத்திருந்தார். அவருடைய அந்த க்ளாஸ் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எங்கோ கொண்டு சென்றது. இன்று அவரை அந்த தாடி ஸ்டைலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ்
மாரி படத்திற்காக நடிகர் தனுஷ் வைத்திருந்த தாடி மற்றும் மீசை ஸ்டைலுக்கு பல்லாயிரம் ரசிகர்கள் உள்ளார்கள். ஆம், தனுஷை வைத்திருந்ததை பார்த்து, அவருடைய ரசிகர்கள் பலரும், அவரை போலவே அதே ஸ்டைல் தாடி, மீசையை வைத்துக்கொண்டார்கள். அவருடைய அந்த ஸ்டைல் அப்போது மிகப்பெரிய டிரெண்ட் செட் செய்தது.
அஜித்
சரண் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அசல். இப்படத்திற்காக செம மாசான தாடி ஸ்டைலை வைத்திருந்தார் நடிகர் அஜித். அந்த ஸ்டைலுக்காகவே படம் பார்க்க பலரும் வந்தனர். ஏன், ரசிகர்கள் பலரும், அஜித் வைத்திருந்தது போலவே தாடி ஸ்டைலையும் வைத்துக்கொண்டு படத்தை கொண்டாடினார்கள்.
விஜய்
அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் மெர்சல். இப்படத்தில் இடம்பெற்ற வெற்றிமாறன் கதாபாத்திரத்திற்காக நடிகர் விஜய் வெறித்தனமான தாடி, மீசை லுக்கை வைத்திருந்தார். அவருடைய அந்த மாஸ் லுக்கை காண பல லட்சம் பேர் திரையரங்கிற்கு வந்தனர். வெற்றிமாறன் என்று திரையில் பேர் ஒலிக்கும் பொழுது, அந்த தாடி மீசையுடன் விஜய்யும் முகம் தெரியும் அந்த நேரம் திரையரங்கம் அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர்களின் தாடி ஸ்டைலில் இதுவும் ஒன்று.