முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு..

By Karthick Raja Jun 30, 2026 04:53 AM GMT
Report

ஜூனியர் என்.டி.ஆர் புதிய படம்

தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டனர்.

முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. | Tamil People Angry On Jr Ntr Murugan Movie

தமிழ் கடவுள் முருகனை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளியிட்ட போஸ்டரில் ஒரு தமிழ் வார்த்தை கூட இல்லை என கேள்வி எழுந்துள்ளது.

கொந்தளித்த தமிழ் மக்கள்

மேலும், இந்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் நாக வம்சி, தனது பதிவில் "Born in the North, Forged in the Heartland, Worshipped in the South, Now... A tale destined to belong to the universe" என குறிப்பிட்டுள்ளார்.

முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. | Tamil People Angry On Jr Ntr Murugan Movie

இதில் "Born in the North" அதாவது, வடநாட்டில் பிறந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் கடவுள் முருகனை எப்படி இப்படி கூற முடியும், வரலாற்றை மாற்றியமைக்க முயற்சிக்கிறீர்களா என பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US