சீரியல் தொடங்கும் முன்பே முக்கிய நடிகையை மாற்றிய சேனல்! ரசிகர்கள் ஷாக்
அண்ணா சீரியல்
ஜீ தமிழில் விரைவில் அண்ணா என்கிற புது சீரியல் தொடங்கபோகிறது. இதற்கு முன்பு விஜய் டிவியில் எக்கச்சக்க சீரியல்கள் நடித்த மிர்ச்சி செந்தில் தான் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்க போகிறார். நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடருக்கு பிறகு இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் தற்போது கம்பேக் கொடுத்து இருக்கிறார்.
சமீபத்தில் அண்ணா சீரியலில் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி இருந்தது.
நடிகை மாற்றம்
அண்ணா சீரியலில் மிர்ச்சி செந்தில் தங்கையாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை தமிழ் ரித்திகா தான் நடிக்க இருக்கிறார் என முன்பே கூறப்பட்டது. ஆனால் ப்ரோமோவில் அவர் இடம்பெறவே இல்லை.
சீரியல் ஒளிபரப்பை தொடங்கும் முன்பே ரித்திகா தமிழ்செல்விக்கு பதில் வேறொரு நடிகையை குழுவினர் மாற்றி இருக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.
குஷ்பூ வரலைனா நான் இந்த நடிகைக்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன்: சுந்தர்.சி