அருண்மொழி வர்மன் எனும் ராஜா ராஜா சோழன்.. தமிழனின் பெருமை கூறும் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் விக்ரம் - ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி - அருண்மொழி வர்மனாகவும், கார்த்தி - வல்லவராயன் வந்திய தேவனகவுகும் நடித்துள்ளார்கள். இதில் கதையின் தலைப்பை தன்னுடைய பெயராக கொண்டுள்ள ஜெயம் ரவியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது.
அருள்மொழி வர்மன்
பொன்னியின் செல்வன், ராஜா ராஜா சோழன் என அழைக்கப்படும் அருண்மொழி வர்மனின் கதாபாத்திரத்திரம் சோழ மக்களுக்காக வாழும் பன்முக திறைமைகொண்ட ராஜாவை பற்றியதே. ஆம், மக்களுக்கு தேவையான நேரத்தில் உதவிக்கரம் நீட்டி, அவர்களுடைய கஷ்டத்தை தன்னுடைய கஷ்டமாக நினைத்து போக்குபவரே ராஜா ராஜா சோழன்.
மக்களிடம் எந்த அளவிற்கு பாசமாக பழகும் தன்மையை கொண்டுள்ளாரோ, அதே போல் எதிரிகளை வீழ்த்துவதிலும் அசாத்தியமான திறமை கொண்டவர். இவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில் 1000 ஆண்டுகள் கடந்து கம்பீரம்மாக நிமிர்ந்து நிற்கிறது.
இன்றுள்ள தொழில்நுட்பத்தினால் கூட செய்யமுடியாத பல விஷயங்களை 1000 வருடத்திற்கு முன் தன்னுடைய பொற்காலத்தில் செய்து இன்று வரை தனது பெயரை தமிழர்களின் வரலாற்றில் நிலைநாட்டியுள்ளார் அருண்மொழி வர்மன் எனும் ராஜா ராஜா சோழன்..

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
