பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
டீன்ஸ்
கடந்த வாரம் தமிழ் சினிமாவில் இருந்து இந்தியன் 2 மற்றும் டீன்ஸ் என இரு திரைப்படங்கள் வெளிவந்தது. இதில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் தான் டீன்ஸ்.
முதல் நாள் இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற சற்று போராடிய நிலையில், அதற்கடுத்த நாட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மாபெரும் வரவேற்பிற்கு மிக்க நன்றி என பார்த்திபன் தெரிவித்து இருந்தார்.
Sci-fi கதைக்களத்தில் உருவான இப்படத்தில் 13 சிறுவர், சிறுமிகள் நடந்திருந்தனர். சில நெகேட்டிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பாசிட்டிவான ரெஸ்பான்ஸும் கிடைத்து வருகிறது.
வசூல்
இந்த நிலையில், இரண்டாவது நாளில் இருந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல பிக்கப் ஆன பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 90 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ரெஸ்பான்ஸ் என்றும், இனி வரும் நாட்களில் இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கப்போகிறது என்றும் பொறுத்திருந்து பார்ப்போம்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
