டிரஸ் மாற்றும் போது வீடியோ எடுக்க முயற்சி பண்ணாங்க - இளம் நடிகை தேஜா வெங்கடேஷ் உருக்கம்!!
தேஜா வெங்கடேஷ்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் "கனா காணும் காலங்கள் 2" வெப் தொடரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை தேஜா வெங்கடேஷ்.
இவர் நடித்திருந்த "நந்தினி" கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இவர் Youtubeலும் மிகவும் பிரபலமான நட்சத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை தேஜா வெங்கடேஷ் தான் அளித்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவம் குறித்து உருக்காமக பேசியுள்ளார்.
பேட்டியில் அவர் கூறியது,
"நான் வாய்ப்பு தேடி பல ஆடிஷனிற்கு சென்றிருக்கிறேன். அதில் 2018ம் ஆண்டு நான் சென்ற ஆடிஷனில் என்னை அவர்களுடைய இடத்தில் டிரஸ் மற்றும்படி சொன்னார்கள். ஆனால் எனக்கு அந்த இடம் பிடிக்காததால் அதை மறுத்துவிட்டு அருகிலுள்ள "காபி டே"வில் மாற்றிக்கொண்டேன்".
"பிறகு, என்னை டைரக்டர் இடுப்பு தெரியும்படி சாரி இருக்க வேண்டும் என்று சொன்னதால் கோவப்பட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன். அடுத்த நாள், எனக்கு ஷூட்டிங் ஸ்பாட் பெண் ஒருவரிடம் இருந்து கால் வந்தது".

"அப்போது அவர் டிரஸ் மாற்றும் இடத்தில் கேமரா உள்ளதாகவும் அதனை வைத்து பெண்களை பிளாக்மெயில் செய்கிறார்கள் என்றும் கூறி அழுதுள்ளார். இதை அறிந்த பிறகு நான் மீடியாவை விட்டு விலகி சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்டேன்".
"என் வாழ்க்கையில் ஒரு நிமிடம் நான் யோசிக்காமல் அங்கு இருந்திருந்தால் என் வாழ்க்கையே வீணாகிருக்கும்" என உருக்கத்துடன் தெரிவித்திருந்தார் நடிகை தேஜா வெங்கடேஷ்.
KPY தீனாவிற்கு இன்று திடீர் கல்யாணம், பெண் யார் தெரியுமா?- இதோ அழகிய ஜோடியின் போட்டோ