தனது மகளுக்கு அழகான பெயர் வைத்து விழாவை கோலாகலமாக கொண்டாடிய புகழ்- வீடியோவுடன் இதோ
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் எத்தனையோ நிகழ்ச்சிகள் வளர்ந்து வந்த கலைஞர்களுக்கு எதிர்காலத்தின் ஆரம்பமாக இருந்தது. அப்படி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி புகழ், ஷிவாங்கி, பாலா போன்றவர்களுக்கு இருந்தது.
பாலா, புகழ் காமெடி ஷோக்களும், ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலமாக மக்களால் அறியப்பட்டவர்கள், ஆனால் குக் வித் கோமாளி தான் அவர்களுக்கு பெரிய ரீச் கொடுத்தது.
இப்போது அவரவர் தங்களது துறையில் சிறப்பாக பணி செய்து வளர்ந்து வருகிறார்கள்.
புகழ் வீடியோ
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு புகழ் நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
இந்த நிலையில் புகழ் தனது மகளின் பெயர் சூட்டு விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளார், அந்த வீடியோவையும் வெளியிட்டு தனது மகளுக்கு ரித்தன்யா என பெயர் வைத்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
