விஜய் படத்தை ரீமேக் பண்ணாதீங்க.. தெலுங்கு ரசிகர் எடுத்த விபரீத முடிவு

By Parthiban.A Dec 09, 2022 10:10 AM GMT
Report

 விஜய் தெறி

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தை தெலுங்கிலும் டப் செய்து ரிலீஸ் செய்தார்கள். மா டிவி சேனலிலும் பல முறை ஒளிபரப்பி இருக்கின்றனர். அதனால் தெலுங்கு ரசிகர்கள் எல்லோருக்கும் தெரிந்த கதை தான் தெறி.

தற்போது நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தெறி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஹரிஷ் ஷங்கர் அந்த படத்தை இயக்குகிறாராம்.

விஜய் படத்தை ரீமேக் பண்ணாதீங்க.. தெலுங்கு ரசிகர் எடுத்த விபரீத முடிவு | Telugu Fans Against Vijay S Theri Remake

அதிருப்தியில் ரசிகர்கள்

புது கதையில் நடிக்காமல் பவன் கல்யாண் ரீமேக் படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தெறி ரீமேக் பண்ணாதீங்க என ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் ஒரு ரசிகர் தெறி ரீமேக் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என கடிதம் எழுதி இருக்கிறார். அது தெறி ரீமேக் படம் தான் என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் தற்போது செய்து வரும் விஷயம் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

பிக் பாஸ் மைனாவுக்கு சம்பளம் ஒரு நாளுக்கு இத்தனை லட்சமா? வெளியான வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US