இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட பிரபலம் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
தக்காளி சீனிவாசன்
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என திரையுலகில் பன்முக திறமை கொண்டவர் தக்காளி சீனிவாசன்.

மனசுக்குள் மத்தாப்பு, இவர்கள் வருங்கால தூண்கள், நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்களை இவர் தயாரித்துள்ளார்.
மேலும், ஜென்ம நட்சத்திரம், அசோகவனம், விட்னஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், கமல்ஹாசன் நடிப்பில் உருவான சூரசம்ஹாரம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காலமானார்
இந்த நிலையில், திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான தக்காளி சீனிவாசன் உடல்நல குறைவால் பெங்களூரில் காலமானார். இவருடைய மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இன்று மார்ச் 11ஆம் தேதி பெங்களூரில் தக்காளி சீனிவாசனுக்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கின்றன.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri