ரஜினியின் 169 படம் குறித்து பிரபல நடிகரே வெளியிட்ட சூப்பர் தகவல்- நெல்சன் அதிரடி
நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு இளம் இயக்குனர். இவரது இயக்கத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என 3 படங்கள் வந்துள்ளது, இதில் விஜய்யுடன் அவர் முதன்முறையாக கூட்டணி அமைத்து எடுத்த பீஸ்ட் மட்டும் கொஞ்சம் சொதப்பியது.
விஜய்யுடன் கூட்டணி அமைத்ததையடுத்து நெல்சன் ரஜினியுடன் இணைந்துள்ளார். அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க இருக்கும் அவரது 169வது படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள்.
இப்புதிய பட அறிவிப்பு எப்போதோ வந்துவிட்டது, ஆனால் அடுத்தகட்டம் எப்போது ஆரம்பம் என இதுவரை தகவல் இல்லை.

ரெடின் கிங்ஸ்லி பேட்டி
இந்த நிலையில் மக்களால் தற்போது கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஒரு பேட்டியில், 169வது படத்தின் முதல் பாதியை இப்போது தான் எழுதி முடித்துள்ளார் நெல்சன், விரைவில் முழு படத்தையும் முடித்துவிடுவார்.
அதற்கான வேலையில் தான் இப்போது முழு மூச்சில் இறங்கியுள்ளார். செம வெறியில் உள்ளார், கண்டிப்பாக அடிச்சு தூக்குவார் என கூறியுள்ளார்.
எல்லையே இல்லா வசூல் வேட்டையில் கமல்ஹாசனின் விக்ரம்- சென்னையில் இவ்வளவு வசூலித்ததா?