எல்லையே இல்லா வசூல் வேட்டையில் கமல்ஹாசனின் விக்ரம்- சென்னையில் இவ்வளவு வசூலித்ததா?
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் விக்ரம். கமலின் தீவிர ரசிகனான லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியதால் கண்டிப்பாக படம் தரமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பினார்கள்.
அவரை தாண்டி இதில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் இருவரும் நடித்ததால் இன்னும் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகமானது.
படத்தின் மேல் மக்களுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு போலவே படமும் சூப்பர் கதைக்களத்துடன் இருக்க ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
உலகம் முழுவதும் படம் 10 நாட்களில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது, பட்ஜெட் என்னவோ ரூ. 120 முதல் ரூ. 150 கோடி வரை தான் என்கின்றனர்.
சென்னை வசூல்
வெளிநாடு, தமிழகம், ஆந்திரா, கேரளா என மற்ற இடங்களின் வசூல் விவரத்தை ரசிகர்கள் கவனித்தாலும் சென்னையில் மட்டும் எவ்வளவு என முக்கியமாக பார்ப்பார்கள்.
அந்த வகையில் படம் ரிலீஸ் ஆகி 12 நாள் முடிவில் சென்னையில் மட்டும் படம் ரூ. 12.5 கோடி வரை வசூலித்துள்ளது.
ஹீரோ போல் நன்றாக வளர்ந்திருக்கும் சிம்ரனின் முதல் மகன்- லேட்டஸ்ட் க்ளிக்

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

நாம் தமிழர் கட்சி பிஜேபி ‘பி’ டீம் தான் - கட்சியில் இருந்து விலகிய நாதக நிர்வாகி குமுறல் IBC Tamilnadu
