ரஜினி-நெல்சன் படத்தின் டைட்டில் இதுவா..செம்ம மாஸ் தலைப்பு
ரஜினி-நெல்சன்
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களை தான் பெற்றது, இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

பாஸ்
ரஜினிகாந்த் இந்த படத்திற்காக செம்ம ஸ்டைலாக சில மேனரிசத்தை செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது, அதோடு படத்தின் அறிவிப்பே செம்ம ஸ்டைலாகவும் இருந்தது.
இந்நிலையில் இப்படத்திற்கு பாஸ் என்று டைட்டில் பரிசீலனையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடைசியாக ரஜினி சிவாஜியின் மொட்ட பாஸாக கலக்கினார், இதிலும் பாஸாக கலக்குவார் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகின்றது.