ரஜினியின் 173வது படம் இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
ரஜினி 173
கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் படம் ரஜினி 173. பல வருடங்களுக்கு பின் கமல் - ரஜினி இப்படத்திற்காக கைகோர்த்துள்ளனர். இப்படத்தை முதலில் இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக இருந்தார்.

ஆனால், திடீரென அவர் இப்படத்திலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன்பின் யார் இந்த படத்தை இயக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குநர் சிபி சக்ரவத்தி இப்படத்தில் கமிட்டானார். இவர் இதற்கு முன் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதை இதுதானா
மேலும் ரஜினியின் 173 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ரஜினி 173 படத்தின் கதை குறித்து சிறிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த The Outfit படத்தின் தழுவலாக இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் ரஜினிகாந்த் Tailor கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக, 70ஸ் காலகட்டத்தில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.