4 நாட்களில் தலைவர் தம்பி தலைமையில் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
தலைவர் தம்பி தலைமையில்
மலையாளத்தில் வெளிவந்த Falimy என்கிற படத்தை இயக்கியவர் இயக்குநர் நிதீஷ் சஹதேவ். இவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி வெளிவந்துள்ள படம்தான் தலைவர் தம்பி தலைமையில்.
ஜீவா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இளவரசு, தம்பி ராமையா, பிரார்த்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல் விவரம்
இந்த நிலையில், தலைவர் தம்பி தலைமையில் படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் 4 நாட்களில் உலகளவில் ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.