ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் இதுவரை எவ்வளவு வசூலித்தது தெரியுமா?
தலைவர் தம்பி தலைமையில்
பொங்கல் தின ஸ்பெஷலாக வரும் என ரசிகர்கள் காத்திருந்த ஜனநாயகன் படம் வெளியாகவில்லை.
ஆனால் அந்த படம் வெளியாகாமல் போக உடனே ரிலீஸிற்கு தயாராகி இருந்த படங்களை வெளியிட்டனவர். அதில் ஒரு படம் தான் தலைவர் தம்பி தலைமையில், ஜீவா நடித்த இப்படத்தை நிதேஷ் சஹாதேவ் என்பவர் இயக்கியிருந்தார்.

மூடானூர் என்ற கிராமத்தில் நடக்கும் திருமணப் பின்னணியில் ஈகோ மற்றும் குடும்பப் பகைகளுக்கு இடையே சிக்கிக்கொள்ளும் ஒரு பஞ்சாயத்து உறுப்பினரின் கதையை மையப்படுத்திய படமாகும்.
பாக்ஸ் ஆபிஸ்
நல்ல கதையும், அதோடு நிறைய நகைச்சுவையும் கலந்த படமாக தலைவர் தம்பி தலைமையில் படம் அமைய ரசிகர்கள் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
படத்தின் வசூலுக்கும் எந்த குறையும் இல்லை, படம் மொத்தமாக ரூ. 34 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.