தலைவர் தம்பி தலைமையில் ஹிந்தி ரீமேக்.. உரிமையை வாங்கிய முன்னணி பிரபலம்
ஜீவா நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் (TTT) படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. பொங்கல் வின்னர் என இந்த படத்தை தான் எல்லோரும் கொண்டாடினார்கள்.
ஜீவாவுக்கு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு வெற்றி படமாக அமைந்த இந்த படம் வரும் பிப்ரவரி 12ம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹிந்தி ரீமேக்
தலைவர் தம்பி தலைமையில் படத்தின் கதையை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் போனி கபூர் தான் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார். TTT படத்தை தியேட்டரில் பார்த்த போனி கபூர் உடனே தயாரிப்பாளரை அணுகி ஹிந்தி மொழி ரீமேக் உரிமையை வாங்கிவிட்டாராம்.
விரைவில் முன்னணி நடிகர்களை வைத்து ஹிந்தியில் அந்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu