சிவகார்த்திகேயனின் டான் படத்தை முதலில் பார்த்த தளபதி விஜய் ! சுவாரஸ்யமான தகவல்..
சிவகார்த்திகேயனின் டான்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் அடுத்து டான் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இப்படம் வரும் மே 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.

படத்தை பார்த்த விஜய்
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான சிபி சக்ரவர்த்தி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.
ஆம், சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள டான் படத்தை முதலில் வேறுசில நடிகர்களை வைத்து கூறும் படமாக இயக்கியிருந்ததாகவும், அதனை சினிமாவில் உள்ள முக்கிய நபர்களுக்கு போட்டுக்காட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்படி அவர் தளபதி விஜய்க்கும் அந்த கூறும் படத்தை போட்டுக்காட்டியதாகவும், அதை பார்த்துவிட்டு விஜய் "சூப்பரா இருக்கு டா" என சொன்னதாகவும் கூறியுள்ளார்.

பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த Overseas காலெக்ஷன் இவ்வளவு தான் ! படுதோல்வியா?