தளபதி 66 படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது ராஷ்மிகா கிடையாதாம்.. இந்த முன்னணி நடிகை தானாம்..
தளபதி 66
பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 66. வம்சி இப்படத்தை இயக்க தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு தளபதி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி, இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மேலும், தளபதி 66 படத்தின் மூலம் தளபதி விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தளபதி 66 படத்தின் பூஜையில் ராஷ்மிகா மற்றும் விஜய் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
கதாநாயகி ராஷ்மிகா கிடையாது
இந்நிலையில், தளபதி 66 படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது ராஷ்மிகா கிடையாதாம்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே தான் முதன் முதலில் கதாநாயகியாக தேர்வுசெய்யப்பட்டாராம். படத்தின் தயாரிப்பாளரும் பூஜாவுடைய பெயரை தான் முதலில் பரிந்துரை செய்துள்ளார்.

ஆனால், பூஜா தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருவதன் காரணமாக, தளபதி 66 படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டது என்று தளபதி 66 பட தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.