தளபதி 66 வில்லன் இவர் தானா ! வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..
தளபதி 66-ல் இணைந்த மேலும் ஒரு முக்கிய நடிகர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் முக்கிய நடிகர்களான பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
அப்படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதெராபாத் பெரிய செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களை சமீபத்தில் அறிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிக்கவுள்ள மேலும் ஒரு நடிகரை அறிவித்துள்ளனர்.
அதன்படி ஸ்ரீகாந்த் என்ற தெலுங்கு நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் கடைசியாக வில்லனாக நடித்த அகண்டா திரைப்படம் அங்கு பெரிய வரவேற்ப்பை பெற்றது.
மேலும் நடிகர் ஷாம் மற்றும் சங்கீதா இருவரும் இப்படத்தில் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.




விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசிகர் ! அவருக்காக நடிகர் சூர்யா செய்த விஷயம்..