தளபதி 67 படத்தின் அறிவிப்பு வராததற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கிறதா ? என்ன தெரியுமா?
தளபதி 67
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
அப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படமாக உருவாகவுள்ள தளபதி 67-ல் நடிக்கவுள்ளார்.
ஆனால் தற்போது வரை அப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இதற்கிடையே ரசிகர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என சொல்லி வருகின்றனர். அதற்கு காரணம் இதே கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்தின் அறிவிப்பும் அதே ஆகஸ்ட் 24 ஆம் தேதி தான் வெளியாகியது.
இதனால் தற்போது ரசிகர்கள் தளபதி 67 படத்தின் அறிவிப்பும் அதே தேதியில் தான் வெளியாகும் என சொல்லி வருகின்றனர். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

ரிலீஸ் முன்பே ரூ.200 கோடி லாபம்.. தளபதி விஜய் செய்த வசூல் சாதனை